விஷால் நடிப்பில் அடுத்ததாக அவரது 31வது திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை து.பா.சரவணன் என்பவர் இயக்கி வருகிறார். ஆக்சன் படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்தை விஷாலே தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு வீரமே வாகை சூடும் எனும் தலைப்பு வைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தில் டிம்பிள் ஹையாதி என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஷாலின் நடிப்பில் வீரமே வாகை சூடும், துப்பறிவாளன்-2, எனிமி ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *