தமிழ் சினிமாவில் தற்போதும் அசைக்க முடியாத காமெடியன் என்றால் வைகைப்புயல் வடிவேலு என்று கூறலாம். கிட்டத்தட்ட 10 வருடங்களில் அவர் பெரிதாக எந்தவித படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவருக்கான இடத்தை எந்த காமெடி நடிகராலும் அசைக்க கூட முடியவில்லை.

இந்த நிலையில், எப்போது தான் வடிவேலு மீண்டும் நடிப்பார் என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அண்மையில், தயாரிப்பாளர் சங்கத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டதை அடுத்து, அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க அவர் கமிட் ஆகி வருகிறார் என்கிற செய்தி ரசிகர் கொண்டாட வைத்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதையின் நாயகனாக வடிவேலு நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தை சுராஜ் இயக்க உள்ளார். இதையடுத்து தற்போது கிடைத்த தகவல் வடிவேலு இந்த படத்தில் நடிப்பதற்கு ரூ. 8 கோடி கோடிக்கு மேல், சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *