தளபதி விஜய் நடிப்பில் 66வது திரைப்படமாக புதிய திரைப்படம் தயாராக உள்ளது. இந்த திரைப்படத்தை தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக விஜய்க்கு இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க பல்வேறு நாயகிககள் பரீசீலிக்க பட்ட நிலையில், தற்போது பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவருக்கு தமிழில் இதுதான் அறிமுக படம். இந்த படத்தில் நடிப்பதற்காக இவருக்கு சுமார் 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த ஒரு தமிழ் நடிகையும் இந்த சம்பளம் வாங்கியதில்லை. நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விட கியாராவுக்கு சம்பளம் அதிகம். இதனை கேட்ட கோலிவுட்வாசிகள் வாயடைத்து போய்விட்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *