இந்த வாரத்தோடு வலிமை ஷூட்டிங்கிற்கு குட் பை.!

தல அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். போனிகபூர் தயாரிக்கிறார், யுவன் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார் என அனைத்தும் நமக்கு தெரிந்ததே. தற்போது, வலிமை படக்குழு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படக்குழு தற்போது ரஸ்யா சென்றுள்ளது. அங்கு, சில ஆக்சன் காட்சிகளுக்கான காட்சிகளை மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளதாம். அந்த காட்சிகள் படத்திற்கு மிக முக்கியமானதாம். அந்த ஷூட்டிங்கும் இந்த வாரத்திற்குள் முடிந்து, படக்குழு நாடு திரும்பிவிடுவார்களாம். …