தி கோஸ்ட் திரைப்படத்தில் இணைந்த ‘விஸ்வாசம்’ அனிகா சுரேந்திரன்.!

விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்குமாரின் மகளாக நடித்திருந்தனர் அனிகா சுரேந்திரன். இவர் தற்போது ஒரு சில மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தெலுங்கு முன்னனி நடிகர் நாகார்ஜுனா கதாநாயகனாக நடிக்கும் தி கோஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்கிறார். நாகார்ஜுனாவின் 62வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் இணையத்தில் தெலுங்கு ரசிகர்களால் வரவேற்கப்பட்டு வருகிறது.