விக்னேஷ் சிவனுடன் இணையும் கவின்-படத்தின் பெயர் அறிவிப்பு..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது திரைப்படங்களில் நடித்து வருபவர் கவின். இவர் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து உருவாக்கிய பட நிறுவனமான ரவுடி பிக்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்க உள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தில் கூழாங்கல் மற்றும் காத்து வாங்குல ரெண்டு காதல் என்ற படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கவின் நடிக்கவுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனரான அருண் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே உதவி இயக்குனராக டிமான்டி காலனி மற்றும் …