இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த . படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, இந்த திரைப்படத்திற்கான படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டதாக திலீப் சுப்பாராயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி விருந்ததாக வெளியாகிறது. விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் அப்டேட் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *