சிறுத்தை படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சிவா. அதன் பிறகு சிறுத்தை சிவா என அனைவரும் கூறும் அளவிற்கு படம் பெரிய ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தை அடுத்து தல அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை இயக்கி இருந்தார். அதில் விவேகம் படத்தை தவிர மற்ற அனைத்து படங்களும் எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றியை பெற்றன.

இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் என நடிகர் பட்டாளமே நடிக்கிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா தனது 44வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை இன்று இணையத்தில் அஜித் ரசிகர்கள்,ரஜினி ரசிகர்கள் என பல சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அண்ணாத்த பட இயக்குனர் சிவா பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ஏதேனும் மாஸ் அப்டேட் வருகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *