சமுத்திரக்கனியை நல்ல நடிகராகவும், சமூக கருத்துள்ள படங்களை இயக்கும் நல்ல இயக்குனராகவும் அனைவருக்கும் தெரியும். அவர் கடைசியாக வினோதய சித்தம் எனும் திரைப்படத்தை இயக்கி முன்னணி வேடத்தில் அவரே நடித்துள்ளார். உடன் தம்பி ராமையாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஜீ5 OTT தளத்தில் வெளியானது. வெளியாகி பலரது பாராட்டுகளை பெற்றுவருகிறது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சங்கத்திற்காக சிறப்பு காட்சி ஏற்பாடு செய்து திரையிட்டாராம் சமுத்திரக்கனி.

அந்த சிறப்பு காட்சியை பார்ப்பதற்கு பல இயக்குனர்கள் வந்துள்ளனர். சமுத்திரகனி இயக்கிய வினோதய சதயம் படத்தை பார்த்த அனைவரும் வெகுவாக இயக்குனர் சமுத்திரக்கனியை பாராட்டியுள்ளனர். அதில், தமிழ் சினிமாவில் ஒரு மூத்த இயக்குனர் நெகிழ்ச்சியில் உச்சிக்கே போனதால், வயது வித்தியாசம் பாராமல் திடீரென சமுத்திரக்கனியின் காலில் விழுந்து வணங்கிவிட்டாராம். இந்த சம்பவத்தை சற்றும் எதிர்பாராத சமுத்திரக்கனி உணர்ச்சிவசப்பட்டு விட்டாராம். அந்த அளவிற்கு அந்த மூத்த இயக்குனருக்கு வினோதய சித்தம் படம் பிடித்துவிட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *