சமீபத்தில் திருமண வாழ்க்கையிலிருந்து நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைத்தன்யாவும் பிரிவதாக அறிவித்தனர். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியது. இவர்களின் பிரிவிற்கு முக்கிய காரணமாக சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளரான பிரீதம் ஜுகல்கர் என்று இணையத்தில் பரவி வந்தது.

இந்த தகவல் டோலிவுட் திரையுலகில் பெருமளவு பரவி வந்தது. அந்த சமயத்தில் சமந்தாவும் பிரீதம் ஜுகல்கரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வலம்வர ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து பிரீதம் ஜுகல்கரை நாகசைத்தன்யாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் திட்டி வருகின்றனர்.  மேலும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

அதனால் தற்போது பிரீதம் ஜுகல்கர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, எனக்கும் சமந்தாவுக்கும் தவறுதலான தொடர்பு இருப்பதாகவும், அதன் காரணத்தினால் சமந்தா திருமண வாழ்விலிருந்து பிரிவதாகவும் தவறுதலாக வதந்தி பரவி வருகிறது. நான் சமந்தாவை சகோதரியாகவே பார்க்கிறேன், சகோதரி என்றே அழைப்பேன். இது நாகசைதன்யாவுக்கும் நன்றாகவே தெரியும்.

தெரிந்தும் அவர் மௌனம் சாதிப்பது வருத்தம் அளிக்கிறது. தற்போது எனக்கு நாகசைத்தன்யாவின் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் நான் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *