தென்னிந்திய சினிஉலகில் நட்சத்திர இளம் ஜோடிகளாக வளம் வந்தவர்கள் சமந்தா – நாக சைதன்யா. இவர்கள் அண்மையில் தாங்கள் மண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிட்டதாக ஆளுக்கொரு அறிக்கை வெளியிட்டனர். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இவர்கள் இருவரும் பிரிந்ததற்கான காரணம் என்னவென்று தெளிவான காரணம் தெரியவில்லை. சினி உலகில் ஆளுக்கொரு காரணம் கூறுவார்கள் ஆனால், உண்மையான காரணம் முன்னாள் தம்பதியினருக்கே தெரியும்.

இந்நிலையில், பிரிவுக்கு முன்னரே சமந்தாவுக்கு ஒரு பாலிவுட் வாய்ப்பு வந்ததாம். அதாவது, இயக்குனர் அட்லீ, ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தில் நயன்தாராவுக்கு முன்னர் சமந்தாவை தான் இயக்குனர் அட்லீ அணுகினாராம். ஆனால், அப்போது, நாக சைதன்யா, தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என கூறியதால், சமந்தா அப்போதைக்கு பெரிய படம் வேண்டாம் என மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், அதன் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். அதே போல, அந்த ஷாருக்கான் பட வாய்ப்பும் நயன்தாரா வசம் சென்றுவிட்டது. இருந்தாலும், தற்போதும் சமந்தா பல்வேறு திரைப்படங்களில் இடைவிடாது நடித்துவருகிறார். இருந்தாலும், ஷாருக்கான் படத்தில் நடித்திருந்தால், பாலிவுட்டில் பெரிய ஹீரோயினாக வலம் வந்திருப்பார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *