தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழின் பிரபல நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது தெலுங்கில் ஒரு படத்திலும், தமிழில் காத்து வாங்குல ரெண்டு காதல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது சமந்தா ரொமாண்டிக் பேண்டஸி படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனரான சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழிலும், தெலுங்கிலும் எடுக்கவுள்ளனர். மேலும் இதனை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பெயர்கள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *