சிலம்பரசன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி ப்ரியதர்ஷன் என பலர் நடித்துள்ளனர்.

முதலில் இப்படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில், திடீரென இப்படம் தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கி, ரிலீஸ் தேதியை நவம்பர் 25ஆம் மாநாடு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

இப்படத்திற்கான டப்பிங் பணியை படுவேகமாக எஸ்.ஜே.முடித்துள்ளாராம். அதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 8 நாளில் முடிக்கவேண்டிய வேலையை 5 நாளில் முடித்துவிட்டேன். எனது தொண்டை, வாய், கை, கால் என உடம்பெல்லாம் என்னிடம் ரெஸ்ட் எடுக்க சொல்லி கெஞ்சுகிறது. அதனால் 10 நாள் ரெஸ்ட். எங்களுக்கு தீபாவளி நவம்பர் 25ஆம் தேதி தாண்டா என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *