சுந்தர்.சி இயக்கத்தில் காமெடி + பேய் + திகில் கலந்து வெளியான திரைப்படங்கள் தான் அரண்மணை 1 & 2. அந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து அரண்மனை 3 திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தையும் சுந்தர்.சியின் மனைவி குஷ்பு சுந்தர் தயாரித்து உள்ளார்.

இந்த திரைப்படத்தில் ஆர்யா கதயநாகனாக நடித்துள்ளார். பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் ராசி கண்ணா ஹீரோயினாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா, மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இருந்து ரடடபட்டா எனும் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் ஆர்யாவும், ராசி கண்ணாவும் பேயாட்டம் ஆடியுள்ளார். காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கிறது. பாடல் பார்ப்பவர்களை ஆட வைக்கும் அளவிற்கு இருக்கிறது. இந்த பாடலை ‘எஞ்சாமி’ பாடல் புகழ் அறிவு எழுதி, பாடியுள்ளார். சி.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *