பிரபல தென்னிந்திய நடிகர் பிரபாஸ் பாகுபலி திரைப்படத்தின் மூலம் அனைவராலும் கவரப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், சலார் போன்ற முக்கிய படங்களில் நடித்து பிசியாக வலம் வரும் பிரபாஸ், இவரது 25 ஆவது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி படம் எடுத்த இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார்.

மேலும் இந்த படத்தின் பெயர் ‘ஸ்பிரிட்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபாஸின் 25 ஆவது படமான ஸ்பிரிட் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என எட்டு மொழிகளில் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *