அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சர்பட்டா பரம்பரை என தனது திரைப்படங்கள் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். இயக்குனராக மட்டுமல்லாமல் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற நல்ல படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் தயாரிப்பு நிறுவனம் மூலமாக 6 புதிய படங்களை தயாரித்தும் வருகிறார். நீலம் புரொடக்சன் சார்பாக கலையரசன் நடித்துள்ள குதிரை வால் திரைப்படம் தயாராகி பல்வேறு சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்று வருகிறது. அடுத்தத்தக்க சமுத்திரக்கனி நடிப்பில் ரைட்டர் எனும் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. சென்சார் செய்யப்பட்டுவிட்டது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக யோகிபாபு நாயகனாக நடிக்கும் பொம்மை நாயகி எனும் காமெடி திரைப்படம் தயாராகி வருகிறது. சுரேஷ் மாரி என்பவர் இயக்கதில் அட்டகத்தி தினேஷ் நடித்து வரும் புதிய படமும் நீலம் புரொடெக்சன் சார்பாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்பட இயக்குனர் அதியன் அதிரை இயக்கத்தில் உருவாகும் புதிய படம், மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குனர் லெனின் பாரதி இயக்கத்தில் ஒரு புதிய படம் என 6 திரைப்படங்களை நீலம் ப்ரொடக்சன் சார்பாக இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார். மேற்கண்ட அனைத்து திரைப்படங்களும் தியேட்டர் ரிலீசுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.

அது போக, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வரும் திரைப்படத்தையும் நீலம் பட நிறுவனமே தயாரிக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *