2019ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களுக்கான தேசிய விருது பட்டியல் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. அதில் பல விருதுகளை தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள் தட்டி சென்றனர். அதில் குறிப்பாக சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதாக கருதப்படும் தாதா சாஹேப் பால்கே விருது நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அறிவிப்பட்டது.

அறிவிக்கப்பட்ட விருதுகள் இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. இந்த விருதுகளை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கலைத்துறைக்கு சிறந்த சேவை ஆற்றியதற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதாக கருதப்படும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே வவிருது ரஜினிகாந்த்திற்கும், சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்திற்காக தனுஷிற்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக விஜய் சேதுபதிக்கும், ஒத்த செருப்பு படத்தை இயக்கி நடித்ததற்காக பார்த்திபனுக்கும் சிறப்பு விருதும், கேடி என்கிற கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு குழந்தை நட்சத்திரத்திற்கான விருதும், விஸ்வாசம் திரைப்படத்திற்கு இசையமைத்த டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கபட்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *