பிக் பாஸ் சீசன் 5, விஜய் டிவியில் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் ப்ரியங்கா, இமான் அண்ணாச்சி, வருண், சின்ன பொண்ணு என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில், நமீதா மாரிமுத்து என்கிற திருநங்கையும் கலந்துகொண்டார். இவர் இன்று வெளியான ப்ரோமோ விடீயோக்களில் நிகழ்ச்சியில் தென்படவில்லை. இவர் பிக் பாஸ் வீட்டைவிட்டு சில காரணங்களால் வெளியேறிவிட்டார் என கூறப்பட்டு வருகிறது. இன்று இரவு ஒளிபரப்பாகும் எபிசோடில் தான் இவர் பிக் பாஸில் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவரும்.

இந்நிலையில், நமிதா மரிமுத்துக்கு பதில் நடிகை சகிலாவின் மகள் மிலா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. இவரும் திருநங்கை தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *