சன் டிவியில் ஒளிபரப்பான டிவி தொடர்களில் மிகவும் பிரபலமானது மெட்டி ஒலி. 90s கிட்ஸ்களால் மறக்க முடியாத தொடர்களில் ஒன்று. அதில் கதையின் நாயகனான கோபியின் (மெட்டி ஒலி தொடரின் இயக்குனர் திருக்குமரன்) மனைவியாக நடித்தவர் தான் உமா மஹேஸ்வரி. இவருக்கு கொடுக்கப்பட்ட விஜி எனும் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

இவருக்கு அண்மையில் தன்னுடைய 40வயதிலே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உயிரிழந்துவிட்டார். இந்த செய்தி மெட்டி ஓளி ரசிகர்கள் மட்டுமல்லாது, சின்னத்திரை உலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்துபோக கூடிய வயதில்லையே என பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையையில், இவர் எப்படி எதற்காக இறந்தார் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்துள்ளதாம். அதிலிருந்து மீள முடியாத அவர் மிகுந்த கஷ்டப்பட்டு உயிரிழந்துள்ளாராம். இந்த செய்தி ரசிகர்களை மேலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *