துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து முடித்துள்ள திரைப்படம் மாறன். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படம் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் OTT என தகவல் வெளியானது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஹாட்ஸ்டார் OTT தளம் இந்த படத்தை வாங்கியுள்ளது. பொங்கல் தினத்தை முன்னிட்டு படம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்பட்டு வருகிறது. இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை.

தற்போது வெளியான தகவலின் படி, இந்த முடிவை தனுஷ் ஆதரித்துள்ளதாக தெரிகிறது. ஏனென்றால், இந்த படத்தை பார்த்த தனுஷிற்கு படம் பிடிக்கவில்லையாம். அவரே இந்த படத்தை OTT க்கு கொடுத்துவிடுங்கள் என கூறிவிட்டாராம். ஏற்கனவே தனுஷ் தியேட்டரில் வெளியாகும் என மிகவும் எதிர்பாத்த ஜகமே தந்திரம் OTTயில் வெளியானது. அது தனுஷிற்கு பிடிக்கவில்லை. ஆனால், இந்த மாறன் படத்தை அவரே OTTக்கு சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது இது எந்த அளவிற்க்கு உண்மை என தெரியவில்லை. படம் வெளியானால் தான் தெரியும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *