சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகி வரும் திரைப்படம் மாநாடு. இந்த படம் முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், பெரிய படங்களின் ரிலீஸ், தியேட்டர் கிடைப்பதில் பிரச்சனை என பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி படம் நவம்பர் 25கு தள்ளிப்போனது.

அதுவும் ஒரு காரணம். ஆனால், உண்மையில், இன்னும் சிம்பு, மாநாடு திரைப்படத்தின் டப்பிங் பணியை முடிக்கவில்லை. அதற்கு அவர் மும்பை சென்றுவிட்டார். அவர் டப்பிங் பேசுவது போல பதிவிடப்பட்ட போட்டோ அவர் டீசர் டப்பிங் பேசியது என கூறுகின்றனர் சினிமாவாசிகள்.

அதாவது, சிம்பு, சில தயாரிப்பாளர்களிடம் படம் நடிப்பதற்கான அட்வான்ஸ் தொகை வாங்கியுள்ளார். ஆனால், அவர் இன்னும் கால்ஷீட் கொடுக்கவில்லை. என கூறி சில தயாரிப்பாளர்கள் போர்க்கோடி தூக்கியுள்ளனர். அதனை அறிந்த மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அந்த அட்வான்ஸ் தொகையை தான் அளிப்பதாக கூறினாராம். அதுவும் சிம்புவின் சம்பளத்தில் இருந்து கொடுப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த விவரம் அறிந்த சிம்பு (ஏற்கனவே மாநாடு திரைப்படத்திற்கு வழக்கத்தை விட குறைவான சம்பளம் தான் சிம்பு கேட்டுள்ளாராம்) அந்த அட்வான்ஸ் பிரச்னையை முடித்துவிட்டு வாருங்கள் பிறகு டப்பிங் பேசி முடித்து தருகிறேன் என வெந்து தணிந்தது காடு திரைப்பட ஷூட்டிங்க்காக மும்பை பறந்துவிட்டாராம்.

அதனால், தான் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவேண்டிய மாநாடு நவம்பர் 25இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சிம்பு மும்பையில் இருந்து வந்து டப்பிங் முடித்தால் தான் நவம்பர் 25ஆம் தேதியாவது வெளியாகும் என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *