தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் போதே இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் லட்சமி மேனன். கும்கி, சுந்தரபாண்டியன் என இரு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் அடுத்தடுத்து ராசியான நடிகை எனவும் பெயர் பெற்றார்.

அதன் பின்னர் படிப்பில் கவனம் செலுத்தவே சினிமாவிற்கு கேப் விட்டார் மீண்டும், முத்தையா இயக்கத்தில் குட்டிப்புலி, கொம்பன், வேதாளம் என ஹிட் கொடுத்தாலும், அடுத்தடுத்து வெளியான படங்களில் தோல்வி அடைந்ததால் சினிமாவில் காணாமல் போனார்.

இவர் மீண்டும் முத்தையா இயக்கத்தில் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்தார். அந்த படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிபெற்றதை அடுத்து தற்போது சில பட வாய்ப்புகள் அவருக்கு வந்துள்ளன.

இவர் அவ்வப்போது, இணையதளத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இவர் முதலில் வெளியிட்டு வந்த புகைப்படங்களில் சற்று எடை குறைந்து காணப்பட்டார். ஆனால், அதன் பின்னர், தற்போது வெளியாகி உள்ள புகைப்படங்களில் சற்று எடை கூடி மீண்டும் பழைய லட்சுமி மேனன் போல போஸ் கொடுத்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் மீண்டும் லட்சுமி மேனன் பழைய நிலைமைக்கு வந்துவிட்டாரே என புலம்பி வருகின்றனர்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *