நாம் செய்யும் ஒரு விஷயம் தெரிந்தோ தெரியாமலோ இன்னொருவரது வாழ்வில் மாற்றத்தையோ, பாதிப்பையோ ஏற்படுத்தும் எனும் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சிம்புதேவன். படம் ஆந்தாலஜி போல எடுக்கப்பட்டு, ஒவ்வொரு கதையில் நடக்கும் சம்பவங்களும், இன்னோர் கதைக்களத்தில் பிரதிபலிக்கிறது. அந்த அளவிற்கு திரைக்கதையில் புகுந்து விளையாடியுள்ளார் இயக்குனர் சிம்புதேவன். இத்தனை வருடம் படம் இயக்கமலிருந்த சிம்புதேவன், இந்த திரைப்படம் மூலம் தனது கால்தடத்தை தமிழசினிமாவில் பலமாக பதித்துள்ளார்.

சுந்தீப் கிஷான், சாந்தனு, ஹரிஷ் கல்யாண், பிரேம் ஜி, விஜயலக்ஷ்மி, வெங்கட்பிரபு என படத்தில் அனைவரும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். பல்வேறு கதைக்களங்கள், ஒருவர் செய்யும் செயல் இன்னொரு கதைக்களத்தில் பிரதிபலிக்கிறது என கூறினாலும், அனைத்தும் அனைவர்க்கும் புரியும்படி இயக்குனர் எளிமையாக திரைக்கதையை கையாண்ட விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கதைக்களம் மற்றும் திரைக்கதையில் தனது பங்களிப்பை பலமாக பதித்த இயக்குனர் சிம்புதேவன், அதனை படமாக்குவதிலும் காட்சியமைப்புகளிலும் கொஞ்சம் பின்வாங்கிவிட்டார் என்றே கூறலாம். அந்தளவிற்கு படத்தின் காட்சியமைப்புகள் கொஞ்சம் சுமாராக இருக்கிறது. திரைக்கதைக்கேற்றவாறு காட்சிப்படுத்திய விதமும் தரமாக இருந்திருந்தால் கசடதபற இன்னும் வல்லினமாக இருந்திருக்கும்.

தற்போதைக்கு OTT தளத்தில் வெளியான ஓர் நல்ல தமிழ் திரைப்படம் கசடதபற என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. திரைப்படம் சோனி லைவ் OTT தளத்திலும், வெங்கட் பிரபுவின் BLACKTICKET எனும் OTT  தளத்திலும் (இந்தியாவிற்கு வெளியே மட்டும்) வெளியாகி உள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *