சூர்யாவின் நடிப்பில் T.J.ஞானவேல் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு அமேசான் OTT தளத்தில் வெளியாக உள்ள திரைப்படம் ஜெய் பீம். இந்த திரைப்படத்தை 2டி நிறுவனம் சார்பாக ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் சூர்யா, ரஜிஸா விஜயன், லிஜிமோல் ஜோன்ஸ், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு நீதிமன்றம் மூலம் அவர்கள் பிரச்னையை கதையின் நாயகன் தீர்க்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

 

இப்படத்தின் ட்ரைலர் இன்று அமேசான் யூ-டியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. ட்ரைலர் தொடங்கும் போதே சில உண்மை நிகழ்வுகளை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. பிறப்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்முறைகள், நீதிமன்ற விசாரணை, அனல் பறக்கும் வசனங்கள், சுட்டெரிக்கும் சூரியன் போல மிளிரும் சூர்யா. என ட்ரைலர் நெருப்பாய் இருக்கிறது.

படத்தில் எந்த வித சென்சார் கட்டும் செய்யாமல், சென்சார் போர்டில் இருந்து A சான்று வாங்கியுள்ளது படக்குழு. படத்தில் எந்தவித காட்சியையும் நீக்க மனமில்லாமல் தான் A சான்று வாங்கி நேரடியாக OTT தளத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் அமேசான் தளத்தில் நவம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *