நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் “டான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி கதைக்களத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் அசோக் என்பவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைப்பதாகவும் தகவல்கள் பரவி வந்தது. அந்த தகவலை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், அசோக் இயக்கும் அந்த படத்தில் நடிகையாக தெலுங்கில் பிரபலமாகி வரும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *