இயக்குனர் வெங்கட் பிரபு தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் சமீபத்தில் OTT தளத்தில் வெளியான திரைப்படம் கசடதபற. இந்த திரைப்படம் 6விதமான கதைக்களங்களை ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்தும் விதமாக ஆந்தலாஜி திரைப்பட பாணியில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் சாந்தனு, ஹரிஷ் கல்யாண், சுந்தீப் கிஷான், வெங்கட்பிரபு, பிரேம் ஜி, விஜயலக்ஷ்மி, ப்ரியா பவானிசங்கர் என பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வரும் வேளையில், இயக்குனரும், நடிகருமான சேரனும் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்,  ‘ இயக்குனர் சிம்பு தேவனுக்கு, ‘கசடதபற’விற்கு நிறைய பாராட்டும் பாசிட்டிவ் விமர்சனங்களும் காதுகளில் கேட்கையில் ஒரு சகோதரனாக மகிழ்ச்சி.. தொடரட்டும் உங்கள் பயணம்.. OTTல் சமீபத்தில் அதிகம் பாராட்டு பெற்ற படமாக ” கசடதபற” இருப்பதில் சந்தோசம் கொள்கிறேன்.. நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *