4 சீசன்களை வெற்றிகரமாக கடந்து பிக் பாஸ் 5வது சீசன் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்ப பட்டு வருகிறது. வாரா வாரம் இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். வார நாட்களில் அதற்கான நாமினேஷன் தொடங்கி வார இறுதி நாளில் சனிக்கிழமை அன்று சிலர் காப்பாற்றப்பட்டு, ஞாயிறு அன்று ஒருவர் வெளியேற்றப்படுவார்.

சனி ஞாயிறுகளில் இந்த முடிவுகளை தொகுப்பாளர் கமல்ஹாசன் இதனை அறிவிப்பார். அதனால், வார இறுதி நாள் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இருக்கும்.

அந்த வகையில், இந்த வாரம் நாமினேஷனில் ப்ரியங்கா, நிரூப், ராஜு, அபிஷேக் என 15 போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதில் பார்வையாளர்கள் வழங்கிய இணைய ஓட்டுகள் அடிப்படையில் இந்த எலிமினேஷன் நடக்கும்.

அதன்படி வெளியான தகவலின் படி, அபிஷேக் ராஜா தான் இந்த வாரம் குறைவான வாக்குகள் வாங்கி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவதாக சில தகவல்கள் உலாவுகின்றன. எது எப்படியோ நாளை இதற்கான விடை நமக்கு தெரிந்துவிடும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *