விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் இசை வாணி, தாமரை செல்வி, சின்ன பொண்ணு, அபிஷேக், அபினய் ஐக்கி பேரி ஆகியோர் நாமினேட் .செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் மட்டும் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படுவார் என்பதால், போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ள சிலரை காப்பாற்ற முயலுகின்றனர்.

அது, இன்று வெளியான ப்ரோமோவில் பிரியங்கா, தாமரை செல்வியை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றவேண்டும் என சக போட்டியாளரான ராஜு மற்றும் இமான் அண்ணாச்சியிடம் கூறுகிறார்.

அதற்கு, இமான் அண்ணாச்சி, ஏன் தாமரையை மட்டும் காப்பாற்ற நினைக்கிறீர்கள், சின்ன பொன்னையும் காப்பாற்ற வேண்டியது தானே என கூறுகிறார். அதற்கு பிரியங்கா நான் நாமினேட் செய்ததே சின்ன பொண்ணை தான் என கூறி அதிர வைக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *