சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பீஸ்ட் நாயகி.??

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் “டான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். கல்லூரி கதைக்களத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் அசோக் என்பவரது இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், …

வலிமை அடுத்த பாடல் குறித்து வெளியான சூப்பர் தகவல்.!

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் “வலிமை” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாடல் இன்று யுவன் பிறந்த நாள் பரிசாக வெளியாகும் என ரசிங்கர்கள் காத்திருந்த நிலையில், இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து …

கடற்கரையில் அமர்ந்து அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்ட ஆண்ட்ரியா.!

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில், பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதனை தொடர்ந்து தரமணி, அரண்மனை 2, விஸ்வரூபம், வடசென்னை, போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் படம் வெளியானது. இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது, தனது சமூகவலைத்தளத்தில் தான் எடுக்கும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த …

சூர்யாவுடன் மீண்டும் இணையும் கார்த்தி.! இயக்குனர் யார் தெரியுமா.??

நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு பட வேலைகளும் ஒரே நேரத்தில் நடைபெற்று வருகின்றன. விரைவில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சர்தார் படத்தில் முழுக்க நடிக்கவுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக …

அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட் கொடுத்த ஸ்டண்ட் இயக்குனர்.!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த . படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, இந்த திரைப்படத்திற்கான படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டுவிட்டதாக திலீப் சுப்பாராயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த …

ரீ என்ட்ரி கொடுக்கும் வைகை புயல்.! சம்பளம் மட்டும் இவ்வளவா.??

தமிழ் சினிமாவில் தற்போதும் அசைக்க முடியாத காமெடியன் என்றால் வைகைப்புயல் வடிவேலு என்று கூறலாம். கிட்டத்தட்ட 10 வருடங்களில் அவர் பெரிதாக எந்தவித படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவருக்கான இடத்தை எந்த காமெடி நடிகராலும் அசைக்க கூட முடியவில்லை. இந்த நிலையில், எப்போது தான் வடிவேலு மீண்டும் நடிப்பார் என ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அண்மையில், தயாரிப்பாளர் சங்கத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டதை அடுத்து, அடுத்தடுத்து திரைப்படங்களில் …