விஜய் சேதுபதி நடிப்பில் வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி சன் டிவியில் நேரடியாக வெளியிடப்பட்டு, நெட்ப்ளிக்ஸ் OTT தளத்திலும் வெளியாக உள்ள திரைப்படம் துக்ளக் தர்பார். அரசியல் படமாக உருவாகும் இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி உள்ளார்.

பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, தற்போது இந்த படத்தில் இருந்து அரசியல் கேடி எனும் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அரசியலில் பெரிய நபராக வர நினைக்கும் விஜய் சேதுபதி செய்யும் சேட்டைகளை பாடலாகியுள்ளனர். இந்த வீடியோ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *