நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னத்தின் பிரமாண்ட கனவு திரைப்படமான பொன்னியின் செல்வனின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து, இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சர்தார் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்து, கார்த்திக்கு கொம்பன் எனும் வெற்றிப்படத்தை கொடுத்த முத்தையா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து பலரது பாராட்டுகளை பெற்ற அபர்ணா பாலமுரளியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

சூர்யாவின் அயன் படத்தில் நடித்த தமன்னா அடுத்து கார்த்தியின் சிறுத்தை படத்தில் நடித்திருந்தார். அதற்கடுத்து சூர்யாவின் சிங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்த அனுஷ்கா, கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த வரிசையில் சூரரை போற்று அபர்ணா பாலமுரளியும் இணைந்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *