பிக் பாஸ் சீசன்களை பார்த்து வரும் ரசிகர்களுக்கும், பார்க்காத ரசிகர்களுக்கும் சினேகனை தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு தனது கட்டிப்பிடி வைத்தியம் மூலம் பேமஸ் ஆனவர். சக போட்டியாளர்களை ஆறுதல் படுத்துவதற்காக அதிலும் பெரும்பாலும் பெண் போட்டியாளர்களை ஆறுதல் படுத்த கட்டிப்பிடி வைத்தியம் செய்துவிடுவார்.

தற்போது அந்த இடத்தை இந்த பிக் பாஸ் சீசன் போட்டியாளர் அபிஷேக் ராஜா நிரப்பி வருவதாக பிக் பாஸ் ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த சீசனில் பெரும்பாலும் பெண்கள் தான் இருக்கிறார்கள். அதனால், அவர் யாரிடம் பேசினாலும் நாமக்கு அப்படி தோன்றுகிறதா இல்லை உண்மையில் அப்படிதான் நடந்துகொள்கிறாரா என தெரியவில்லை.

அதிலும் குறிப்பாக பவனி ரெட்டியுடன் அடிக்கடி அவர் மணிக்கணக்கில் கடலை போடுவது பவனி ரெட்டி ஆர்மியை கடுப்படைய செய்துவருகிறதாம். மணிக்கணக்கில் பெண் போட்டியாளர்களுடன் பேசிவது, கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுவது என சினேகனை மிஞ்சி வருகிறார் என பிக் பாஸ் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *