தமிழ் சினிமாவில் தற்போதும் அசைக்க முடியாத காமெடியன் வடிவேலு. கிட்டத்தட்ட 10 வருடங்களில் அவர் பெரிதாக எந்தவித படங்களில் நடிக்கவில்லை என்றாலும், அவருக்கான இடத்தை எந்த காமெடி நடிகராலும் அசைக்க கூட முடியவில்லை என்பது நிதர்சனம்.

அண்மையில், தயாரிப்பாளர் சங்கத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கப்பட்டதை அடுத்து, அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்க அவர் கமிட் ஆகி வருகிறார் என்கிற செய்தி ரசிகர் கொண்டாட வைத்துள்ளது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதையின் நாயகனாக வடிவேலு நடிக்க உள்ளார். அந்த திரைப்படத்தை சுராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்து, பாதியில் நின்று போன இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தை மீண்டும் தொடங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அந்த பேச்சுவார்த்தை வெற்றிபெற்றால், மீண்டும் இம்சை அரசன் உருவாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அதனை அடுத்து, லைகா நிறுவனம் சில முன்னனி நடிகர்களின் படத்தில் முதன்மை காமெடியனாக நடிக்கவும், அதனை அடுத்து 2 படங்களில் முதன்மை கதாபாத்திரமாகவும் வடிவேலுவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *