கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின்  முதல் பாகத்தை பார்த்து சிலிர்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் முழு வேலையும் முடிவடைந்து விட்டது. படத்தை ரிலீஸ் செய்வது மட்டுமே முதல் வேலை.

அப்படி இருக்க நாடு முழுக்க கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பல திரைப்படங்கள் OTTக்கு தள்ளப்படும் சூழலுக்கு மாறியுள்ளன. இதில் சூர்யாவின் சூரரை போற்று, ஆர்யா நடிப்பில் வெளியான டெடி , சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் நேரடி OTT  யில் வெளியாகி மாபெரும் வரவேற்ப்பை பெற்றன.

தற்போது அதே போல ஒரு பிரமாண்ட திரைப்படத்தை நேரடியாக OTTயில் வெளியிட ஒரு முன்னணி நிறுவனம் கே.ஜி.எப்-2 படதயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாம். படத்திற்கு 250 கோடி ருபாய் விலையும் பேசப்பட்டதாம். ஆனால், படக்குழு இந்த ஆஃபரை முற்றிலும் மறுத்துவிட்டதாம். கே.ஜி.எப்-2 திரைப்படம் தியேட்டர் அனுபவத்திற்காக எடுக்கப்பட்டது. அதனை தியேட்டரில் கண்டுகளித்தல் தான் ரசிகர்களுக்கு அப்படம் மகிழ்ச்சியை தரும். என படக்குழு மறுத்துவிட்டதாம்.

கே.ஜி.எப்- 2 திரைப்படத்திற்கு இந்திய முழுவதும் எதிர்பார்ப்பு எகிறி போய் உள்ளது. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிகர் செய்தாலே போதும், கே.ஜி.எப் -2 வசூல் மழை பொழியும் என்பது தயாரிப்பாளருக்கு நன்றாகவே தெரியும் அதனால் தான் படத்தை திரையரங்கில் வெளியிட படக்குழு காத்திருக்கிறது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *