விவேக், மிர்ச்சி சிவா மற்றும் பலர் இணைந்துள்ள ‘எங்க சிரிங்க பாப்போம்’.! அமேசான் OTT தளத்தில்…

திரையரங்குகள் தற்போது கொரோனா பரவல் காரணமாக கிட்டத்தட்ட கடந்த ஒன்றரை வருடங்களாக சரிவர இயங்காமல் இருந்து வருகிறது. இந்த நேரத்தில் சினிமா ரசிகர்கள் தங்கள் கவனத்தை OTT தளம் பக்கம் தங்கள் பார்வையை திரும்பியுள்ளனர். பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் கூட OTTயில் நேரடியாக வெளியாகி கொண்டிருக்கின்றன. மேலும், OTT வெப் தொடர்களில் நடிக்க முன்னணி நடிகர், நடிகைகள் கூட ஆர்வமாக நடித்து வருகின்றனர் . 

அந்த வகையில், மறைந்த நகைச்சுவை ஜாம்பவான் விவேக் , மிர்ச்சி சிவா உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் இணைந்து ‘LOL எங்க சிரி பாப்பாம்’ என்கிற ரியாலிட்டி ஷோவை உருவாக்கி இருந்தனர். அந்த ரியாலிட்டி ஷோ தற்போது வெளியாக உள்ளது. வரும் 27ஆம் தேதி அமேசான் OTT தளத்தில்  வெளியாக உள்ளதாம்.  இந்த தகவல் தற்போது வெளியாக உள்ளது. 

இந்த ரியாலிட்டி ஷோ வில் மறைந்த நடிகர் விவேக், மிர்ச்சி சிவா ஜட்ஜாக வருகின்றனர். காமெடி நடிகர் சதீஸ், குக் வித் கோமாளி புகழ், ஆர்த்தி, பவர் ஸ்டார், பிரேம் ஜி, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் என பலர் கலந்துகொண்டுள்ளனர். நடிகர் விவேக் மறைந்த பிறகு வெளியாகும் ரியாலிட்டி ஷோ என்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.  

here’s a joke.
10 Comedians walk into a house…but no one is allowed to laugh except you!@actorsathish @theabishekkumar @maya_skrishnan @Syamathegaama @Pugazh_VijayTv @Premgiamaren @RjVigneshkanth @harathi_hahaha @BaggyTheComic @ActorSeenivasan @actorshiva #LOLEngaSiriPaapom pic.twitter.com/Xvtx8GDVGw

— amazon prime video IN (@PrimeVideoIN) August 9, 2021

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *