லைகா நிறுவனத்தையே கதறவிடுகிறாரா களவாணி இயக்குனர்.?!

சூப்பர் ஸ்டாரின் 2.O , தர்பார், தற்போது மணிரத்னம் இயக்கிவரும் அவரின் கனவு படமான பொன்னியின் செல்வன், ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் பிரமாண்டமாக உருவான இந்தியன்-2 (தற்போது என்ன நிலைமை என தெரியவில்லை) ஆகிய பிரமாண்ட படங்களையே அசால்டாக தயாரித்த, மற்றும் தயாரித்து வரும் லைகா நிறுவனமானது, களவாணி பட இயக்குனர் சற்குணம் இயக்கும் புதிய படத்தையும் தயாரித்து வருகிறது. 

இந்த திரைப்படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க, ராஜ்கிரண், ராதிகா, ஆர்.கே.சுரேஷ், ஜெயப்ரகாஷ் என பலர் நடிக்கிறன்றனர். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். 

இந்த படத்தில் சில முக்கிய கதாபாத்திரத்திற்கு தயாரிப்பு தரப்பு வேறு சில நடிகர்களை சிபாரிசு செய்ததாம். ஆனால், அதெல்லம் முடியாது இந்தெந்த கதாபாத்திரத்திற்கு இவர்கள் தான் வேண்டும் என கறாராக இருக்கிறாராம் இயக்குனர் சற்குணம். பெரிய பெரிய இயக்குனர்களின் பிரமாண்ட படங்களையே அசால்டாக தயாரித்த இந்நிறுவனம், தற்போது சின்ன பட்ஜெட்டில் ( லைகா நிறுவனம் தயாரிக்கும் படங்களை ஒப்பிடுகையில் ) தயாராகி வரும் இந்த பட இயக்குனரை கட்டப்படுத்த முடியவில்லையே என  கூறி வருகிறார்களாம், இந்த தகவலை சினிமா வட்டாரங்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். 

ஒரு படத்தின் வெற்றியும் தோல்வியும் பெரும்பாலும் இயக்குனரையே சாரும். அப்படி இருக்க, ஒரு கதாபாத்திரத்தில் யார் சரியாக இருப்பர் என்பது பற்றி இயக்குனருக்கு தான் நன்றாக தெரியும் எனவும் சிலர் கூறிவருகின்றனர். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *