சிரிக்க வைக்கலாம்.! ஆனால் சிரிக்க கூடாது.! விவேக் போடும் புதிய புதிர்.! கலக்கல் ட்ரைலர் இதோ…

மறைந்த நடிகர் , ஜனங்களின் கலைஞன் விவேக் தொகுத்து வழங்கிய காமெடி ஷோ விரைவில் அமேசானில் வெளியாக உள்ளது. இந்த காமெடி நிகழ்ச்சிக்கு LOL எங்க சிரி பாப்போம் என தலைப்பு வைத்துள்ளனர். இந்நிகழ்ச்சியை விவேக் உடன் இணைந்து நடிகர் மிர்ச்சி சிவாவும் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிகழ்ச்சி இம்மாதம் (ஆகஸ்ட் ) 27ஆம் தேதி அமேசான் OTT தளத்தில் வெளியாக உள்ளது. 

இந்த காமெடி நிகழ்ச்சியின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் இந்நிகழ்ச்சியின் விதிமுறைகளை விவேக்கும், சிவாவும் கூறுகின்றனர். அதில், நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள்  மற்றவர்களை சிரிக்கவைத்து அவர்களை வெளியேற்ற வேண்டும். மற்றவர்களை சிரிக்க வைக்கலாம், ஆனால்,போட்டியாளர்கள் சிரிக்க கூடாது. போட்டி முடியும் வரை சிரிக்காமல் கடைசி வரை இருப்பவருக்கு 25 லட்சம் பரிசு பணம் கிடைக்கும். 

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக காமெடி நடிகர் சதீஸ், குக் வித் கோமாளி ‘புகழ்’, ஆர்த்தி, பவர் ஸ்டார், பிரேம் ஜி, விக்னேஷ்காந்த், அபிஷேக், மாயா, ஹரினா,பாகி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். 

In an alternate universe, “Comedians in Costumes creating Chaos ????????‍♀️“@actorsathish @theabishekkumar @maya_skrishnan @Syamathegaama @VijaytvpugazhO @Premgiamaren @RjVigneshkanth @harathi_hahaha @BaggyTheComic @ActorSeenivasan @actorshiva #LOLEngaSiriPaappom releasing on 27 Aug. pic.twitter.com/Bn9AHxbegA

— amazon prime video IN (@PrimeVideoIN) August 17, 2021

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *