குழந்தை கடத்தல் குற்ற பின்னணி – போலீஸ் அதிகாரி சிபிராஜ் – வால்டர் விமர்சனம்!

இயக்குனர் பத்ரி அவர்கள் இயக்கத்தில் சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் வால்டர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரின் காஞ்சவாலா அவர்கள் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் ஒரு காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

கதைக்களம்

சிபிராஜ் ஒரு நேர்மையான காவல்துறை ஐ.பி.எஸ் அதிகாரியாக செயல்படுகிறார். இந்நிலையில், இவர் சென்னையில் அதிகாரியாக பதவி ஏற்ற பிறகு அவர் கட்டுப்பாட்டில் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்கள் இருக்கிறது. இந்நிலையில், அவர் பதவியேற்ற பிறகு மருத்துவமனையில் உள்ள பிறந்த குழந்தை ஒன்று காணாமல் போகிறது. அது மட்டுமன்றி இன்னும் நான்கு மருத்துவமனையில் இருந்த பிறந்த குழந்தைகளும் திருடு போகிறது.

இது சில கும்பல்கள் தலைமையில் நடைபெறுகிறது என்பதை சிபிராஜ் அறிந்துகொண்டு, இதற்கு காரணமான வரை தேடி அலைகிறார். அதன்பின் இதற்கு காரணம் நாட்டி தான் என்பதை அறிந்து கொண்டு குழந்தைகளை கண்டுபிடிக்க போராடுவதே  திரைக்கதை.

விமர்சனம்

படத்தின் கதாநாயகன் ஆகிய சிபிராஜ் போலீஸ் அதிகாரி ரோலுக்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளார். சண்டைக்காட்சிகளில் அனைவரையும் ரசிக்க வைக்கும் அளவுக்கு நடித்துள்ள இவருக்கு ஜோடியாக நடித்துள்ள ஷ்ரின் காஞ்வாலா அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தோற்றமும் ரசிக்கும் வகையில் இருந்துள்ளது.

மேலும் படத்தின் வில்லன் ஆகிய நாட்டி படத்திற்கு இன்னும் மெருகூட்டி இருக்கிறார். கதாபாத்திரத்தின் மேன்மையை உணர்ந்து அட்டகாசமாக நடித்திருக்கிறார். சமுத்திரக்கனி மேலும் சிறிது நேரம் மட்டுமே படத்தில் வந்த சமுத்திரகனி அனைவர் மனதிலும் பதியும் அளவு நடித்துள்ளார். சனம் ஷெட்டி மற்றும் ரித்விகா ஆகியோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். மெடிக்கல் கிரைம் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தை இயக்குனர் அன்பரசன் அருமையாக செதுக்கியுள்ளார். வித்தியாசமான திரைக்கதை உடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் கருத்துக்கள் மற்றும் திருப்பங்கள் என அனைத்தும் அருமையாக இருந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *