இது சிம்புதேவன் படம்தானா என வியக்க வைக்கும் ‘ கசடதபற’ டீசர் இதோ…

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி ஆகிய ஃபேண்டஸி படங்களை இயக்கியவர் இயக்குனர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் ஆந்தாலஜி படமாக தயாராகியுள்ள திரைப்படம் கசடதபற. இப்படத்தை வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் கம்பெனி மூலம் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், சாந்தனு, சுந்தீப் கிஷான், ப்ரியா பவானிசங்கர், ரெஜினா, பிரேம் ஜி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

விஜய் மில்டன், எம்.எஸ்.பிரபு, பாலசுப்ரமணியம், எஸ்.ஆர்.கதிர், ஆர்.டி.ராஜசேகர், சக்தி சரவணன் என 6 ஒளிப்பதிவாளரும், ஆண்டனி, பிரவீன்.கே.எல், விவேக் ஹர்ஷன், மு.காசி விஸ்வநாதன், ராஜா முகமத், ரூபென் என 6 எடிட்டர்களும், யுவன் சங்கர் ராஜா, பிரேம் ஜி அமரன், சாம்.சி.எஸ், சீன் ரோல்டன், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான் என 6 இசையமைப்பாளர்களும் இந்த ஒரு படத்தில் பணியாற்றியுள்ளனர். 

இப்படத்தின் டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டீசரை பார்த்த நமக்கு பிரமிப்புதான் ஏற்படுகிறது. காமெடி, ஃபேண்டஸி படங்களை இயக்கிய சிம்புதேவனா இந்த மாதிரியான சீரியஸ் கதைக்களத்தை கையாண்டுள்ளார் என  மிரளவைத்துள்ளார். டீசரை பார்த்த ரசிகர்கள் கசடதபற ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 

Happy to launch the #KasadatabaraTeaserhttps://t.co/LB08XFDBhU

Congrats @vp_offl @chimbu_devan @tridentartsoffl and Team Kasadatabara ????????#KasadatabaraOnSonyliv from aug27@SonyLiv @Muzik247in

— VijaySethupathi (@VijaySethuOffl) August 16, 2021

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *