அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த “வாத்தி கம்மிங் ” வீடியோ பாடல்..!

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 13-ம் தேதி பொங்கல் விருந்ததாக வெளியான திரைப்படம் மாஸ்டர். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளி சென்றது. அதன் பிறகு தற்போது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் நல்ல வசூலையும் பெற்று வருகிறது. உலகளவில் சுமார் 220 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாஸ்டர் படத்திலிருந்து குட்டி ஸ்டோரி வீடியோ பாடலை கடந்த 23 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். அதனை தொடர்ந்து தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த “வாத்தி கம்மிங் ” வீடியோ பாடலை இன்று மாலை 5 மணிக்கு சன் மியூசிக் சேனனில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள். 
 

For the first time, watch song from Thalapathy’s Master | Only on #SunMusic #VaathiComing | Today @ 5 PM#ThalapathyVijay #Master #MasterSongs #ThalapathyVijaySongs @actorvijay pic.twitter.com/26KukuSYgS

— Sun Music (@SunMusic) January 27, 2021

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *